கள்ளச்சாராய மரணம்.. விஜய்யை அடுத்து 2026ல் அரசியலுக்கு வரும் இன்னொரு நடிகரின் கண்டனம்..!

  • IndiaGlitz, [Thursday,June 20 2024]

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் குறித்து திரை உலகில் இருந்து முதல் குரல் கொடுத்தவர் தளபதி விஜய் என்பது தெரிந்தது. அந்த வகையில் தளபதி விஜய் போலவே 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக சமீபத்தில் அறிவித்த நடிகர் விஷாலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் இது குறித்து கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.

சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாராயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன்.

 

More News

விஜய் மட்டும் தான் குரல் கொடுத்துள்ளார். மற்றவர்களுக்கு ஏன் அச்சம்? ஜெயக்குமார் கேள்வி..!

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் உட்பட ஒரு சிலர் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மற்றவர்கள் ஏன் அச்சப்படுகிறார்கள்

கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.. கமல்ஹாசன்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி அரசியல்  தலைவர்கள் கண்டனம்

'புஷ்பா 2' ரிலீஸ் தள்ளி வைக்க துணை முதல்வர் காரணமா? அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் செய்தி

கள்ளச்சாராய மரணத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? சரத்குமாரின் அடுக்கடுக்கான கேள்விகள்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு நடிகர் சரத்குமார் வருத்தம் தெரிவித்து

தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம்.. கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து பா ரஞ்சித்..!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 30 பேர்கள் வரை பலியான சம்பவத்திற்கு ஏற்கனவே தளபதி விஜய் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தமிழக அரசுக்கு கண்டனம்