'விடுதலை'க்கு பின் சூரியின் அடுத்த படம்.. முக்கிய அப்டேட் தந்த படக்குழு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ’விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜீ5 ஓடிடியில் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது சூரி ஹீரோவாக நடித்த அடுத்த படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சூரி நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வந்த படம் கொட்டுக்காளி. நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான ’பெப்பில்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த படத்தில் சூரியன் நாயகனாகவும், நாயகியாக அன்னாபென் நடித்து வந்தனர். நடிகை அன்னாபென் மலையாள திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக சூப்பர் ஹிட் ஆன ’ஹெலன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சக்திவேல் ஒளிப்பதிவில், கணேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் குழுவினர் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் எடுத்துக் கொண்ட குரூப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
It's a wrap!
— Vinothraj PS (@PsVinothraj) May 22, 2023
Thanks to my entire team for all your efforts.#KottukkaaliWrapUp@Siva_Kartikeyan @KalaiArasu @sooriofficial @benanna_love @sakthidreamer @thecutsmaker @valentino_suren @alagiakoothan @Raghav4sound @promoworkstudio @kabilanchelliah @ragulparasuram @BanuPriya2620 pic.twitter.com/1W1qcUlJzY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments