'விடுதலை'க்கு பின் சூரியின் அடுத்த படம்.. முக்கிய அப்டேட் தந்த படக்குழு..!

  • IndiaGlitz, [Monday,May 22 2023]

சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ’விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜீ5 ஓடிடியில் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது சூரி ஹீரோவாக நடித்த அடுத்த படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சூரி நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வந்த படம் கொட்டுக்காளி. நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான ’பெப்பில்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த படத்தில் சூரியன் நாயகனாகவும், நாயகியாக அன்னாபென் நடித்து வந்தனர். நடிகை அன்னாபென் மலையாள திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக சூப்பர் ஹிட் ஆன ’ஹெலன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சக்திவேல் ஒளிப்பதிவில், கணேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் குழுவினர் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் எடுத்துக் கொண்ட குரூப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

400 வாட்ஸ் பல்ப் போல மின்னுறாங்களே… தமிழ் நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் இளம் நடிகை

'லால் சலாம்' திரைக்கதையில் உதவி செய்வது இந்த பிரபல இயக்குனரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் திரைக்கதையில் பிரபல இயக்குனர் ஒருவர் அவருக்கு உதவி செய்து

ரஜினி, கமல் படத்தில் நடித்த சரத்பாபு காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர்  இன்று  சரத் பாபு காலமானார் என்ற செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

60 வருட சினிமா அனுபவம்… உலகநாயகன் கமல்ஹாசனுக்கு விருது வழங்க இருக்கும் IIFA!

6 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி இன்றைக்கு உலகப் பிரபலமாக இருந்துவரும் உலகநாயகன் கமல்ஹாசனை

சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகினர்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான பெங்காலி நடிகை ஒருவர் ஷுட்டிங் முடிந்து வீட்டிற்கு சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.