'விடுதலை' படத்தை அடுத்து ரஜினிகாந்த் பாராட்டிய இன்னொரு படம்.. படக்குழுவினர் மகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Tuesday,April 11 2023]

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது மற்றொரு சூப்பர் ஹிட் படத்தையும் பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சசிகுமார் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவான ’அயோத்தி’ என்ற திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யாஷ்பால் சர்மா, புகழ் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் வசூல் அளவில் வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் ஒரு சில அரசியல்வாதிகள் பார்த்து பாராட்டிய நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது

அயோத்தி…



நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.

முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.

தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

ரஜினியின் பாராட்டை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.