அஜர்பைஜான் டூ தென்னாபிரிக்கா.. சுரேஷ் சந்திரா கொடுத்த சூப்பர் அப்டேட்.. அஜித் ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Saturday,June 29 2024]

நடிகர் அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சில முக்கிய காட்சிகள் படமாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படப்பிடிப்பு ஜூலை முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் வரை அஜர்பைஜான் நாட்டில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படப்பிடிப்பை முடித்தவுடன் சென்னை திரும்பவும் அஜித் உடனடியாக ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளதாக சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் 15 முதல் 20 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பிற்கு முன்பே சில முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் அவர் கூறினார். குறிப்பாக நாயகி, வில்லன் உள்பட முக்கிய நட்சத்திரங்களை அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தின் தனிப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதாகவும், குறிப்பாக அஜித்தின் அறிமுக பாடல் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டதாகவும் அந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இன்னொரு பாடல் கம்போசிங் பணியை முடித்து விட்டதாகவும் அந்த பாடலின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ’விடாமுயற்சி’ மற்றும் குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து தீபாவளி மற்றும் பொங்கலுக்கு இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

More News

4 லட்சம் முதல் 150 கோடி வரை.. 10 ஆண்டுகளில் பிரபாஸின் அசுர வளர்ச்சி..!

பிரபாஸ் தனது முதல் படத்தில் வெறும் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில் 10 ஆண்டுகளில் அவர் அசுர வளர்ச்சி அடைந்து தற்போது இந்தியாவின் முன்னணி நடிகராக உள்ளார் என்பதும்

ஆம், எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உண்மைதான்.. 36 வயது நடிகையின் அதிர்ச்சி அறிவிப்பு..!

36 வயது நடிகைக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவிய நிலையில் அந்த நடிகை 'ஆம் எனக்கு மார்பக

பணத்தை மொத்தமாக ஏமாந்து நிற்கும் மனோஜ்.. ஞாயிறு அன்று 2 மணி நேரம் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' ப்ரோமோ ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் வரும் ஞாயிறு அன்று இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் வெங்கல் ராவுக்கு வடிவேலு செய்த நிதியுதவி.. எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

பிரபல காமெடி நடிகர் வெங்கல்ராவ் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் சிலர் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்

சின்னத்திரை டிஆர்பியில் சறுக்கியதா 'சிறகடிக்க ஆசை'.. முதல் 10 இடங்களில் எந்தெந்த சீரியல்கள்?

சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகியவற்றில் ஏராளமான சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் இந்த சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.