'வேட்டையன்' ரிலீசுக்கு அடுத்த வாரமே ரிலீஸ் ஆகும் விமல் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,October 06 2024]

பொதுவாக மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானால் அடுத்த இரண்டு வாரத்திற்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில்லை என்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் ரிலீஸ் ஆன அடுத்த வாரமே விமல் நடித்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி ஜீவா நடித்த 'பிளாக்’ திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், அக்டோபர் 18ஆம் தேதி விமல் நடித்த ’சார்’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குனர் மற்றும் நடிகர் போஸ் வெங்கட் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

விமல் நடித்த ’சார்’ திரைப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியை ஒரு பெரிய மனிதர் குழந்தைகள் யாரும் படிக்கக் கூடாது என்று இடிக்க முயற்சி செய்யும்போது, அதை தடுக்க ஒரு ஆசிரியர் தன்னந்தனியாக எப்படி போராடுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் டிரைலரில் இருந்து தெரியவந்தது.

கன்னி மாடம் படத்தை இயக்கிய புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், விமல், சாயாதேவி, சிராஜ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இனியன் ஹரிஷ் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைத்திருக்கிறார். சரண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

'நான் மதம் மாற மாட்டேன்': சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த 'தளபதி 69' நடிகை..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை மதம் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவும் நிலையில், நான் எந்த காரணத்தை

'ஜெயிலர் 2' படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் படம்.. ஹீரோ இந்த பிரபல நடிகரா?

சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் ' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க இருப்பதாகவும்,

33 ஆண்டுகளுக்கு பின் இணையும் ரஜினிகாந்த் - மணிரத்னம் கூட்டணி: 'தளபதி 2' உருவாகிறதா?

சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்த் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'தளபதி' திரைப்படம், கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான நிலையில், மீண்டும் 33 ஆண்டுகள் கழித்து

'கோட்' படத்தில் விஜய் - சிவகார்த்திகேயன்.. படப்பிடிப்பு காட்சியின் வீடியோ வெளியீடு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இந்த காட்சியை படமாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை தயாரிப்பு நிறுவனம்

இந்த படத்தின் ரீமேக்கா 'தளபதி 69'? உண்மையாக இருந்தால் வேற லெவல்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில், இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த படம் சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.