'வேட்டையன்' ரிலீசுக்கு அடுத்த வாரமே ரிலீஸ் ஆகும் விமல் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானால் அடுத்த இரண்டு வாரத்திற்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில்லை என்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் ரிலீஸ் ஆன அடுத்த வாரமே விமல் நடித்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி ஜீவா நடித்த 'பிளாக்’ திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், அக்டோபர் 18ஆம் தேதி விமல் நடித்த ’சார்’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குனர் மற்றும் நடிகர் போஸ் வெங்கட் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
விமல் நடித்த ’சார்’ திரைப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியை ஒரு பெரிய மனிதர் குழந்தைகள் யாரும் படிக்கக் கூடாது என்று இடிக்க முயற்சி செய்யும்போது, அதை தடுக்க ஒரு ஆசிரியர் தன்னந்தனியாக எப்படி போராடுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் டிரைலரில் இருந்து தெரியவந்தது.
"கன்னி மாடம்" படத்தை இயக்கிய புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், விமல், சாயாதேவி, சிராஜ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இனியன் ஹரிஷ் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைத்திருக்கிறார். சரண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
CLASS ASSEMBLE🔥
— Bose Venkat (@DirectorBose) October 5, 2024
Prepare for the grand arrival of #SIR on 18th October.
Produced: @pictures_sss @sirajsfocuss
Director: @DirectorBose
Presented by : #vetrimaaran @GrassRootFilmCo
Release by : #RomeoPictures @ pic.twitter.com/yA53DZJaTc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com