close
Choose your channels

'வேட்டையன்' படத்தை அடுத்து மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய உண்மைக்கதை.. ஞானவேல் தகவல்..!

Tuesday, September 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முடித்துள்ள ’வேட்டையன்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் நேற்று வெளியான நிலையில் அடுத்தடுத்து புரமோஷன் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’வேட்டையன்’ படமே ஒரு உண்மை கதையின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டது என்றும் தமிழகத்தில் நடந்த சில என்கவுண்டர் குறித்த உண்மை கதை தான் இந்த படத்தின் திரைக்கதை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’வேட்டையன்’ படத்தை அடுத்து மீண்டும் ஒரு உண்மை கதையை படமாக்க இருப்பதாக இயக்குனர் ஞானவேல் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரவணபவன் ராஜகோபால் - ஜீவஜோதி உண்மை சம்பவத்தை தான் படமாக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரவணபவன் ராஜகோபாலை எதிர்த்து ஜீவஜோதி நடத்திய சட்ட போராட்டத்தை பத்திரிகையாளராக இருந்தபோது தான் உற்று கவனித்ததாகவும், அதனை புதிய பரிமாணத்தில் திரைப்படமாக்க இருப்பதாகவும் ஞானவேல் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ’தோசா கிங்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை இந்தியில் திரைப்படமாக்க இருப்பதாகவும் ஞானவேல் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment