வெங்கடேஷ் பட், தாமுவை அடுத்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு இன்னொரு பின்னடைவு.. அடுத்த சீசன் வருமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருந்தனர் என்பதும் தெரிந்தது. குறிப்பாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இரண்டு நடுவர்களும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்றார்கள் என்பதும் அவர்கள் இருவரும் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின்னர் இந்த நிகழ்ச்சி தொடருமா? கேள்வி எழுந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து ரவூஃபா தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக நாங்கள் விஜய் டிவியில் மட்டுமே பணிபுரிந்தோம். இது எங்கள் இரண்டாவது வீடு என்றே கருதி வந்தோம். எண்ணற்ற நிகழ்ச்சிகளை தயாரித்து பல நட்சத்திரங்களை வடிவமைத்தோம்.
இப்போது விஜய் டிவியில் இருந்து பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த மே மாதம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலகிய போது இன்னும் எங்களிடம் இரண்டு நிகழ்ச்சிகள் இருந்தன என்பது சந்தோஷமாக இருந்தோம். ஆனால் தற்போது ’குக் வித் கோமாளி’ மற்றும் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ ஆகிய நிகழ்ச்சிகளில் இருந்தும் நாங்கள் எதிர்பாராதவிதமாக விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளை நாங்கள் நான்கு சீசன்களை செய்துள்ளோம், எங்களுக்கு எப்போதும் இந்த நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியை கொடுத்தன, இப்போது கனத்த இதயத்துடன் இந்த இரண்டு நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறுகிறோம். எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து பார்வையாளர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எங்களுடன் பயணம் செய்த அனைத்து நட்சத்திரத்திற்கும் எங்களது மனமார்ந்த நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வெங்கடேஷ் பட், தாமு ஆகியவர்களை அடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் விலகி உள்ளதால், இனி அடுத்த சீசன் வருமா என்ற கேள்வி பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments