வெங்கடேஷ் பட்-ஐ தொடர்ந்து இன்னொரு பிரபலமும் விலகல்.. என்ன நடக்குது குக் வித் கோமாளியில்?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாகவும் இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஐந்தாவது சீசனில் முதல் நான்கு சீசனங்களில் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட், தாமு ஆகியோர்கள் தான் நடுவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நேற்று வெங்கடேஷ் பட் தனது முகநூலில் ’குக் வித் கோமாளி’ ஐந்தாவது சீசனில் தான் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.
வெங்கடேஷ் பட் அவர்களின் இந்த அறிவிப்பு குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இன்னொரு அதிர்ச்சியாக இன்னொரு நடுவரான தாமுவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளதாக தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் நானும் வெங்கடேஷ் வெங்கடேஷ் பட் அவர்களும் இணைந்து ஒரு நிகழ்ச்சியை நடத்த உள்ளோம் என்றும் அந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எங்கள் இருவரையும் சேர்ந்து அந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் இல்லை என்று தாமு அவர்களும் கூறியதை அடுத்து ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து விஜய் டிவி நிர்வாகம் இந்த இருவருக்கு இணையாக வேறு நடுவர்களை தேர்வு செய்யுமா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments