வெங்கட்பிரபுவின் ட்வீட்.. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அஜித் ரசிகர்கள் கோரிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’மங்காத்தா’ திரைப்படம் ரீரிலீஸ் குறித்த தகவலை வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் உடனே சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி அவர் நடித்த ’பில்லா’ மற்றும் ’தீனா’ ஆகிய படங்கள் ரிலீசாக இருப்பதாக கூறப்படும் நிலையில் ’மங்காத்தா’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என ஏராளமான அஜித் ரசிகர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்று தனது சமூக வலைதள பக்கத்தில் ’மங்காத்தா’ திரைப்படத்தை திரையிட ஏகப்பட்ட கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் ’மங்காத்தா’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளை செய்கிறோம். ஆனால் அந்த படத்தின் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் உள்ளது, அந்நிறுவனம் மனது வைத்தால் மட்டுமே முடியும்’ என்று பதிவு செய்துள்ளார்.
உடனே அஜித் ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ’மங்காத்தா’ படத்தை மே 1ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிப்பை வெளியிடுங்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறோம் என்று பதிவு செய்து வருகின்றனர். எனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’மங்காத்தா’ ரிலீஸ் குறித்து அறிவிப்பை வெளியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
@sunpictures call attend panni mankatha re release may 1 nu announcement vidunga😤 crores of fans wait pandrom #Mankatha #Ajithkumar𓃵 #ThalaAjithkumar #VidaaMuyarchi #GoodBadUgly https://t.co/og6iJdJypt
— Surendar AK (@SurendarAKs) April 27, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com