மீண்டும் ஜெய்யுடன் ஒரு படம்: பிரபல இயக்குனர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,February 18 2022]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவான ’வீரபாண்டியபுரம்’ என்ற திரைப்படம் நேற்று வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மீண்டும் ஜெய்யுடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது: விஜய் நடித்த ’வீரபாண்டியபுரம்’ திரைப்படம் நேற்று வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது. இந்த படத்தை ஆதரித்த அனைவருக்கும் எனது நன்றி.

பொதுவாக ஜெய் சிங்கிள் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை என்றும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த ’ராஜா ராணி’ ’எங்கேயும் எப்போதும்’ போன்ற படங்கள்தான் ஓடியது என்றும் சென்டிமென்டாக சிலர் கூறி வருகின்றனர். அந்த சென்டிமென்ட்டை ’வீரபாண்டியபுரம்’ பிரேக் செய்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இந்த நிலையில் மீண்டும் ஜெய்யுடன் ஒரு படத்தில் இணைய இருக்கிறேன். இந்த படம் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.