அஜித்தை அடுத்து விஜய் பட ரீமேக்கில் அக்சயகுமார்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த 'வீரம்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் நடித்த உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அஜித்தின் 'வீரம்' படத்தை அடுத்து விஜய் நடித்த 'கத்தி' திரைப்படத்தின் ரீமேக்கிலும் அக்சயகுமார் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்த திரைப்படம் 'கத்தி'. லைகா நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த படத்தின் ரீமேக்கில் அக்சயகுமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமந்தா கேரக்டரில் நடிக்க பிரபல முன்னணி பாலிவுட் நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'காஞ்சனா' திரைபடத்தின் இந்தி ரீமேக்கில் அக்சயகுமார் நடித்து வரும் நிலையில் தற்போது அஜித், விஜய் ஆகிய இரண்டு மாஸ் நடிகர்கள் நடித்த படங்களின் ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout