6 ஆண்டுகள் கழித்தும் மீண்டும் ஒரே நாளில் அஜித்-விஜய் படங்கள் ரிலீஸ்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த 'வீரம்' மற்றும் விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது. இதனையடுத்து வரும் 2020ஆம் ஆண்டு அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது அஜித் நடித்து முடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதேபோல் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்தை வரும் 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் விஜய்யின் அடுத்த படத்தை 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். விஜய்யின் உறவினரான சினேகா பிரிட்டோ தயாரிக்கவுள்ள இந்த படமும் 2020 கோடை விடுமுறையில் வெளீயிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
சமீபத்தில் ரஜினியின் 'பேட்ட' திரைப்படமும் அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டு படங்களும் வெற்றி பெற்றது போல் அஜித், விஜய் படங்களும் ஒரே நாளில் வெளியானால் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout