அஜித்-சிறுத்தை சிவா கூட்டணியில் மீண்டும் இணையும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Monday,January 18 2016]

'வேதாளம்' என்ற வெற்றி படத்தை அடுத்து அறுவை சிகிச்சை செய்து தல அஜீத் ஓய்வு எடுத்து கொண்டிருந்தாலும் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வந்து கொண்டே இருக்கின்றது.

வீரம், வேதாளம் படங்களை அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா மூன்றாவது முறையாக அஜித் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க அவர் பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதில் தமன்னா முன்னணியில் இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஏற்கனவே சிவா இயக்கிய 'வீரம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளதால், அதே வெற்றி ஜோடி மீண்டும் இணைய அதிக வாய்ப்புள்ளதாகவும். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

More News

'கெத்து' தமிழ் வார்த்தைதான். ஆதாரத்துடன் கூறும் உதயநிதி

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலினின் 'கெத்து' திரைப்படம் சென்சார் அதிகாரிகளால் 'யூ' சர்டிபிகேட் பெற்றிருந்தும் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை....

விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு கிடைத்த செல்பி வாய்ப்பு

'நானும் ரெளடிதான்' வெற்றிப்படத்திற்கு பின்னர் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பெற்றுவிட்ட விஜய்சேதுபதி நடித்த மூன்று படங்கள் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது....

பிப்ரவரி 12-ல் ரிலீஸ் ஆகும் பேய்ப்படம்

ஏப்ரல் மாதத்தில், ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு, நண்பன், உள்பட பல படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த், கடந்த சில வருடங்களாக சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். இந்நிலையில் கோலிவுட் திரையுலகில் மீண்டும் ரிஎண்ட்ரி ஆக ஒரே ஒரு வெற்றியை எதிர்பார்த்திருக்கும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'செளாகார்பேட்டை' படம் அவருக

PETA அமைப்பின் பிராண்ட் அம்பாசிடரா தனுஷ்?

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தடையால்ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்...

'சண்டக்கோழி 2' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் லிங்குசாமி பலவிதமான தடைகளை தாண்டி 'ரஜினிமுருகன்' படத்தை கடந்த பொங்கல் தினத்தை ரிலீஸ் செய்தார்...