close
Choose your channels

'வாரிசை அடுத்து மீண்டும் தெலுங்கு பட இயக்குனரா? விஜய்க்கு கதை சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

Tuesday, April 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார் என்பதும் இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’லியோ’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்குவார் என்றும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் ஒரு செய்தி வெளியாகி கொண்டிருக்கிறது. அது மட்டும் இன்றி வேறு சில இயக்குனர்கள் விஜய்க்கு கதை கூறி இருப்பதாகவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் விஜய்க்கு கதை கூறியதாகவும் முதல் சந்திப்பிலேயே அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதால் ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவின் ‘வீரசிம்ஹ ரெட்டி’ என்ற படத்தை இயக்கியவர் இவர் தான் என்பதும் அதற்கு முன் ரவிதேஜா நடித்த ‘கிராக்’ என்ற வெற்றி படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோக்களை மாஸாக காட்டக்கூடிய திறமையுள்ளவர் என்பதால் விஜய்க்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment