'வாரிசு' படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு தயாரிப்பாளரின் படத்தில் விஜய்?

  • IndiaGlitz, [Tuesday,October 18 2022]

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் தற்போது தளபதி விஜய் ’வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார் என்பதும் தமன் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. விஜய், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், பிரித்திவிராஜ், சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தை மீண்டும் ஒரு தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘புஷ்பா’ என்ற சூப்பர்ஹிட் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 68’ உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை அட்லி இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.