விஜய்யின் 'வாரிசு' படத்துடன் கனெக்ட் ஆன தனுஷின் 'வாத்தி' : அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் கடந்த சில நாட்களாக நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் தமிழக ரிலீஸ் உரிமையை நிறுவனம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும், சமீபத்தில் தனுஷ் எழுதிய இந்த படத்தின் பாடல் வெளியாகி வைரலாகியது என்பதும் தெரிந்ததே.
ஏற்கனவே தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’, ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ‘வாத்தி’ தனுஷின் ஹாட்ரிக் வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Delighted to be associated with @SitharaEnts by releasing #Vaathi in Tamilnadu ??
— Seven Screen Studio (@7screenstudio) December 23, 2022
Happy in associating with @dhanushkraja sir .. More to come ??#VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @Fortune4Cinemas #SrikaraStudios @adityamusic pic.twitter.com/CtXomVrWqB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com