'வரலாறு' படத்திற்கு பின் அஜித்தின் தரமான சம்பவம்.. ஆனா இது மாதிரி சொதப்பாமல் இருக்கணுமே?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிப்பில் கேஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான 'வரலாறு’ திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பது பலரும் அறிந்தது. இந்த நிலையில் 'வரலாறு’ படத்திற்கு பின்னர் சரியாக 18 ஆண்டுகள் கழித்து அதே போன்ற ஒரு தரமான சம்பவத்தை செய்ய அஜித் காத்திருக்கிறார் என்ற தகவல் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடிக்க இருக்கும் 63 வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்த இருப்பதாக கூறப்படுகிறது. 'வரலாறு’ திரைப்படத்தில் அப்பா மற்றும் இரு மகன்கள் என மூன்று வேடத்தில் அஜித் நடித்த நிலையில், சரியாக 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே போன்று ’குட் பேட் அக்லி’ படத்தில் 3 வேடங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வரலாறு போலவே மாபெரும் சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தில் சிம்பு மூன்று வேடத்தில் நடித்த படத்தை இயக்கினார் என்றும், அந்த படம் போல் அஜித் படம் பிளாப் ஆகிவிட கூடாது என்றும் சிலர் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments