வனிதா, சுரேஷை அடுத்து அபிராமியும் வாக்-அவுட்டா? அதிர்ச்சி வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வரும் அபிராமி, வனிதா, சுரேஷை அடுத்து தானாகவே வெளியேறி விட்டாரா? என்ற கேள்வி எழும் வகையில் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் ஒருசில வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் எண்ட்ரி ஆனார்கள் என்பதும் தெரிந்ததே. மேலும் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எவிக்ட் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் சுருதி15 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் போட்டியில் இருந்து வெளியேறினார் என்பதும் தெரிந்ததே .
இந்த நிலையில் நாளை இந்த நிகழ்ச்சியிலிருந்து குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேறப் போவது யார் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் திடீரென அபிராமி போட்டியில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷாரிக் தனது இஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் லாஸ்லியா இணைந்து நடனமாடிய 'பேபி நீ சுகர்’ என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அபிராமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த பாடலுக்கு எப்படி நடனம் ஆடினார் என்ற சந்தேகம் பலருடைய மனதில் எழுந்துள்ளது. ஏற்கனவே சிம்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக கூறப்பட்ட அபிராமி போட்டியில் இருந்து தானாக வெளியேறி விட்டாரா? அல்லது இந்த வாரம் அபிராமி எவிக்ட் செய்யப்பட்டாரா? அப்படியே வெளியேறி இருந்தாலும் ஞாயிறு அன்று எவிக்ட் செய்யப்படும் ஒருவர் வெள்ளியன்றே எப்படி ஷாரிக் உடன் நடனமாடுவார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் விடை அளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com