வனிதா, சுரேஷை அடுத்து அபிராமியும் வாக்-அவுட்டா? அதிர்ச்சி வீடியோ!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வரும் அபிராமி, வனிதா, சுரேஷை அடுத்து தானாகவே வெளியேறி விட்டாரா? என்ற கேள்வி எழும் வகையில் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் ஒருசில வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் எண்ட்ரி ஆனார்கள் என்பதும் தெரிந்ததே. மேலும் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எவிக்ட் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் சுருதி15 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் போட்டியில் இருந்து வெளியேறினார் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் நாளை இந்த நிகழ்ச்சியிலிருந்து குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேறப் போவது யார் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் திடீரென அபிராமி போட்டியில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷாரிக் தனது இஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் லாஸ்லியா இணைந்து நடனமாடிய 'பேபி நீ சுகர்’ என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அபிராமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த பாடலுக்கு எப்படி நடனம் ஆடினார் என்ற சந்தேகம் பலருடைய மனதில் எழுந்துள்ளது. ஏற்கனவே சிம்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக கூறப்பட்ட அபிராமி போட்டியில் இருந்து தானாக வெளியேறி விட்டாரா? அல்லது இந்த வாரம் அபிராமி எவிக்ட் செய்யப்பட்டாரா? அப்படியே வெளியேறி இருந்தாலும் ஞாயிறு அன்று எவிக்ட் செய்யப்படும் ஒருவர் வெள்ளியன்றே எப்படி ஷாரிக் உடன் நடனமாடுவார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் விடை அளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சிரஞ்சீவியிடம் வாழ்த்து பெற்ற ஜிவி பிரகாஷ்: வைரல் வீடியோ

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

தனது முதல் வெற்றியை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் பிபிகேஎஸ் அணியுடன் நாளை பலப்பரீட்சை

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏப்ரல் 3ஆம் தேதி பிரபோர்ன் ஸ்டேடியத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து மோதுகிறது.

இந்தியாவில் இதுதான் முதல் முறை: 'பீஸ்ட்' டிரைலர் குறித்த வெறித்தனமான அப்டேட்!

இந்தியாவில் முதல் முறையாக நவீன டெக்னாலஜி மூலம் 'பீஸ்ட்'  டிரைலர் ரிலீஸாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

'ஆர்.ஆர்.ஆர்' நாட்டு நாட்டு பாடலுக்கு கணவருடன் செம ஆட்டம் போட்ட நடிகை!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ஒரே வாரத்தில் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல்

ஒரே தேதியில் ரிலீஸான மூன்று வெற்றிப்படங்கள்: கார்த்தியின் உணர்வுபூர்வமான டுவிட்!

ஒரே தேதியில் ரிலீஸ் ஆன மூன்று வெற்றி படங்கள் குறித்த உணர்வு பூர்வமான டுவிட் ஒன்றை நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.