'வணங்கான்' படத்தை அடுத்து 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலகுகிறாரா சூர்யா?

  • IndiaGlitz, [Friday,December 23 2022]

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த ’வணங்கான்’ என்ற திரைப்படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து இந்த படத்தில் அதர்வா அல்லது அருண்விஜய் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் திடீரென ‘வாடிவாசல்’ படத்திலிருந்தும் சூர்யா விலகல் உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘வாடிவாசல்’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன பின்னர் இன்னும் டெஸ்ட் படப்பிடிப்பு தவிர படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றும் ஒரு பக்கம் ’விடுதலை’ படப்பிடிப்பில் பிசியாக வெற்றிமாறனும் ’சூர்யா 42’ படத்தில் சூர்யா பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்களின் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதால் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ‘வாடிவாசல்’ படக்குழுவினர் கூறியபோது ‘வாடிவாசல்’ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக வெளிவந்திருக்கும் தகவலில் உண்மை இல்லை என்றும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படம் டிராப் ஆக வாய்ப்பே இல்லை என்றும் கூறிவருகின்றனர்.

More News

ரஜினி படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கின்றாரா யுவன்ஷங்கர் ராஜா?

முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

விளக்கேற்றும்போது நடந்த தீ விபத்து: தமிழ் நடிகை வீட்டில் பலத்த பொருட்சேதம்

நடிகை ஒருவர் தனது வீட்டில் விளக்கேற்றும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது வீட்டில் விலைமதிப்புள்ள ஏராளமான பொருட்கள் நாசம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

3 முன்னணி நாயகிகள் நடிக்கும் படம்.. இசையமைப்பாளராகும் டிரம்ஸ் சிவமணி

3 முன்னணி நாயகிகள் நடிக்கும் திரைப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

'தளபதி 67' வில்லன் அர்ஜூனுக்கு இத்தனை கோடியா சம்பளம்?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் இவர் தான்! பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் மட்டும் பிக்பாஸ் நாமினேஷன் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஓட்டு போடுவது வியாழக்கிழமை