'வலிமை' வெளியேறியதால் பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!

  • IndiaGlitz, [Friday,January 07 2022]

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நேற்று அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ’ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய பெரிய பட்ஜெட் படங்களும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றன.

திங்கள் முதல் சனி வரை தினசரி 3 காட்சிகளுடன் மட்டும் திரையிட சின்ன பட்ஜெட் படங்கள் முன்வந்துள்ளதாகவும், பொங்கல் விடுமுறையில் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்க இந்த புதிய படங்கள் உதவும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’வலிமை’ பொங்கல் ரிலீஸில் இருந்து வெளியேறியதை அடுத்து சசிகுமாரின் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ சதீஷின் ’நாய் சேகர்’ விதார்த்தின் ’கார்பன்’ மற்றும் அஸ்வினின் ’என்ன சொல்ல போகிறாய்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஜய் சேதுபதியின் ’கடைசி விவசாயி’ அருண் விஜய்யின் ’பார்டர்’ ஆகிய திரைப்படங்களும் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படமும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பரிதாபங்கள் உள்ளிட்ட 15 சேனல்கள்: ஒரே இரவில் நிகழ்ந்த சோகம்!

யூடியூபில் பிரபலமாக இருக்கும் பரிதாபங்கள் உள்ளிட்ட 15 சேனல்கள் திடீரென முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய்சேதுபதி மீதான அவதூறு வழக்கில் முக்கிய உத்தரவு!

விஜய்சேதுபதி மீது பதிவு செய்யபப்ட்ட அவதூறு வழக்கில் முக்கிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

12 லட்ச ரூபாயுடன் வெளியேறிய சிபியை பார்த்து மனைவி கூறியது என்ன தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் 12 லட்ச ரூபாயுடன் வெளியேறிய சிபி குறித்து அவரது மனைவி தனது சமூக வலைத்தளத்தில் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 

விவாகரத்தான கணவர் மீது திடுக்கிடும் புகார் அளித்த இசைவாணி!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான இசைவாணி தனது விவாகரத்தான முன்னாள் கணவர் மீது மோசடி புகார் ஒன்றை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.

ரகசியத் திருமணம் செய்து கொண்டேனா? கொந்தளித்த முன்னணி நடிகை!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப்பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரை