'வலிமை'யை அடுத்து 'டாக்டர்' அப்டேட் தந்த கலெக்டர்: 'வேற லெவல்' என சிவகார்த்திகேயன் பாராட்டு

  • IndiaGlitz, [Saturday,March 13 2021]

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ’வலிமை’ குறித்து ஒரு அப்டேட்டை தந்தார். அதில் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து தற்போது கலெக்டர் விஜயகார்த்திகேயன், ‘டாக்டர்’ அப்டேட்டை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் முக கவசம் அணிந்து இருக்கும் ’டாக்டர்’ படத்தின் புகைப்படத்தை பதிவு செய்து ’சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வரும் அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிந்து வாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்

இந்த பதிவை பார்த்த சிவகார்த்திகேயன் ’நீங்க வேற லெவல் பிரதர்’ உண்மையிலேயே இது மிகவும் பொறுப்பான ஒரு செயல். நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் வாக்களிக்க செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த கலெக்டர் விஜயகார்த்திகேயன், ‘அதான் டாக்டரே சொல்லிட்டாரே, நாம் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்வோம்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

More News

தலைவி vs தலைவா: 'சின்னத்தல' உடன் பிக்பாஸ் ஷிவானி!

கிரிக்கெட் ரசிகர்களால் 'சின்னத்தல' என்று அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல் போட்டியின் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்னை வந்துள்ளார் என்பது தெரிந்ததே

சிவராத்திரி நாளில் ஆண் குழந்தைக்கு தாயான எருமை சாணி ஹரிஜா… குவியும் வாழ்த்து!

பிரபல யூடியூப் சேனலான எருமை சாணி மூலம் புகழ் பெற்றவர் ஹரிஜா.

கபாலி பட நடிகையின் வேற லெவல் போட்டோ ஷுட்… வைரல் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கபாலி”. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே

சின்னவயசு கனவு? புளியமரத்தில் தொங்கி விளையாடும் முன்னணி நடிகர்!

“பருத்திவீரன்“ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்தி தற்போது தமிழின் முன்னணி நடிகராக அறியப்படுகிறார்

ஒட்டகத்துடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை யாஷிகா ஆனந்த்… வைரல் வீடியோ!

தமிழில் “துருவங்கள் 16“, “இருட்டு அறையில் முரட்டு குத்து“, “நோட்டா“, “ஜாம்பி“ போன்ற படங்களில் நடித்து இருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.