'வலிமை'யை அடுத்து 'டாக்டர்' அப்டேட் தந்த கலெக்டர்: 'வேற லெவல்' என சிவகார்த்திகேயன் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ’வலிமை’ குறித்து ஒரு அப்டேட்டை தந்தார். அதில் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து தற்போது கலெக்டர் விஜயகார்த்திகேயன், ‘டாக்டர்’ அப்டேட்டை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் முக கவசம் அணிந்து இருக்கும் ’டாக்டர்’ படத்தின் புகைப்படத்தை பதிவு செய்து ’சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வரும் அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிந்து வாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்
இந்த பதிவை பார்த்த சிவகார்த்திகேயன் ’நீங்க வேற லெவல் பிரதர்’ உண்மையிலேயே இது மிகவும் பொறுப்பான ஒரு செயல். நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் வாக்களிக்க செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த கலெக்டர் விஜயகார்த்திகேயன், ‘அதான் டாக்டரே சொல்லிட்டாரே, நாம் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்வோம்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
Here is the #Doctor update மக்களே ! #WearMaskAndVote #TamilNaduElections2021 #Doctorupdate pic.twitter.com/pdBvl4gZhX
— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) March 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments