வலிமை, பீஸ்ட், ஆர்.ஆர்.ஆர் படங்களை அடுத்து ரெட் ஜெயண்ட் வெளியிடும் மாஸ் படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ அஜித்தின் ‘வலிமை’ தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’, எஸ்.எஸ். ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டு வெளியிட்டது. அது மட்டுமின்றி உலக நாயகன் கமல்ஹாசனின் ’விக்ரம்’ உள்பட பல படங்களை அந்த நிறுவனம் தான் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’டான்’ திரைப்படம் மே 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.
Another association we are extremely excited about! ??❤️
— Red Giant Movies (@RedGiantMovies_) April 6, 2022
Red Giant Movies will be distributing @Siva_Kartikeyan’s #Don in Tamil Nadu. #DONfromMay13 @Udhaystalin @anirudhofficial @Dir_Cibi @priyankaamohan @LycaProductions @SKProdOffl @MShenbagamoort3 @SonyMusicSouth pic.twitter.com/rUqkWEeBrX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com