'ஆர்.ஆர்.ஆர்.', 'வலிமை'யை அடுத்து இன்னொரு பெரிய பட்ஜெட் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்.’, என்ற திரைப்படம் ஜனவரி 7ம் தேதியும், அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதியும் ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணங்களால் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில சின்ன பட்ஜெட் படங்கள் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 'ஆர்.ஆர்.ஆர்.’, ‘வலிமை’ படங்களை அடுத்து இன்னொரு பெரிய பட்ஜெட் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் கொரடலா சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆச்சார்யா. இந்த படம் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படம் 140 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The release of #Acharya stands postponed due to the pandemic.
— Konidela Pro Company (@KonidelaPro) January 15, 2022
The new release date would be announced soon.
Megastar @KChiruTweets @AlwaysRamCharan #Sivakoratala @MsKajalAggarwal @hegdepooja #ManiSharma #NiranjanReddy @MatineeEnt @KonidelaPro pic.twitter.com/oVjqcvfl9U
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com