close
Choose your channels

வடிவேலு, நயன்தாரவை அடுத்து தெலுங்கு ஹீரோ தான்.. சுந்தர் சியின் அதிரடி திட்டம்..!

Tuesday, October 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’அரண்மனை 4’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிசியாகி உள்ள சுந்தரி சி அடுத்தடுத்து படங்களை இயக்கி வரும் நிலையில், அவர் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ’அரண்மனை 4’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஆன நிலையில், தற்போது அவர் வடிவேலுவுடன் இணைந்து ’கேங்கர்ஸ்’ என்ற படத்தை நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அதுமட்டுமின்றி, இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கும் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்க இருக்கிறார் என்பதும், இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில், மேற்கண்ட இரண்டு படங்களையும் முடித்துவிட்டு சுந்தர் சி, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா படத்தை இயக்க இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே அடுத்தடுத்து சுந்தர் சி இயக்கும் 3 திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment