வடிவேலு, நயன்தாரவை அடுத்து தெலுங்கு ஹீரோ தான்.. சுந்தர் சியின் அதிரடி திட்டம்..!

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

’அரண்மனை 4’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிசியாகி உள்ள சுந்தரி சி அடுத்தடுத்து படங்களை இயக்கி வரும் நிலையில், அவர் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ’அரண்மனை 4’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஆன நிலையில், தற்போது அவர் வடிவேலுவுடன் இணைந்து ’கேங்கர்ஸ்’ என்ற படத்தை நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அதுமட்டுமின்றி, இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கும் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்க இருக்கிறார் என்பதும், இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில், மேற்கண்ட இரண்டு படங்களையும் முடித்துவிட்டு சுந்தர் சி, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா படத்தை இயக்க இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே அடுத்தடுத்து சுந்தர் சி இயக்கும் 3 திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயன்தாராவின் 80 நிமிட டாக்குமெண்டரி பிலிம்.. நெட்பிளிக்ஸ் சூப்பர் அறிவிப்பு..!

நடிகை நயன்தாராவின் 80 நிமிட டாக்குமெண்டரி படம் விரைவில் வெளியாக இருப்பதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் நாளே ரவீந்தருக்கு பிரச்சனை.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட ரஞ்சித்- அருண்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே போட்டியாளர் ரவீந்தருக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனிதநேயத்துடன் ரஞ்சித் மற்றும் அருண் ஆகிய

நீங்க போறது நல்லது கிடையாது: சுனிதா செய்த நோஸ்கட் .. ஜாக்குலின் கண்ணீர்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இன்றைய முதல் புரமோ வெளியாகி உள்ள

2025 புத்தாண்டு பலன்கள் எப்படி இருக்கும் - ஜோதிடர் பாலகிருஷ்ணா ரெட்டியின் கணிப்பு.!

பிரபல ஜோதிடர் A.R. Balakrishna Reddy அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், 2025 ஆம் ஆண்டின் ஜோதிட பலன்களை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

500 டான்சர்களுடன் 'தளபதி 69' பாடல் படப்பிடிப்பு.. பாடலாசிரியர், பாடகர் யார் தெரியுமா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.