மீண்டும் கமல் படத்தில் இணைகிறாரா மோகன்லால்? பிரபல இயக்குனர் பேச்சுவார்த்தை!

  • IndiaGlitz, [Sunday,December 25 2022]

கமல்ஹாசன் நடித்த ’உன்னைப் போல் ஒருவன்’ என்ற திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல்ஹாசன் - மோகன்லால் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மலையாளத்தில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி என்பவரின் இயக்கத்தில் உருவான ’ஜல்லிக்கட்டு’ திரைப்படம் சமீபத்தில் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டது என்பது தெரிந்ததே. இவரது இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் ’மலைக்கோட்டை வாலிபன்’. இந்த படத்தில் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் மோகன்லாலுடன் கமல் ஹாசனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மீண்டும் கமல்ஹாசன் மோகன்லால் இணைந்து ஒரே படத்தில் நடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கடலில் படுத்து கொண்டே மிதக்கும் தமிழ் நடிகை. வைரல் வீடியோ

தமிழ் நடிகை ஒருவர் கடலில் படுத்துக்கொண்டே மிதந்து கொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

சீண்டுனா சிரிப்பவன் சுயவழி நடப்பவன்: 'துணிவு' படத்தின் கேங்ஸ்டா பாடல்

அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

திருமணமாகி 11 வருடங்கள்.. பிரபல நடிகரின் பதிவுக்கு காஜல் அகர்வால் வாழ்த்து!

 திருமணமாகி 11 ஆண்டுகள் ஆனது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பிரபல நடிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த பதிவுக்கு நடிகை காஜல் அகர்வால்,

உயிர் - உலகம் இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன் - விக்கி: வைரல் புகைப்படம்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த இரட்டை குழந்தைகளுடன் நயன் - விக்கி தம்பதிகள் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையதளங்களில்

சமந்தா ஒரு இரும்பு பெண்மணி: பிரபலத்தின் கணவர் எழுதிய வைரல் பதிவு

சமந்தா ஒரு இரும்பு பெண்மணி என பிரபல பாடகியின் கணவர் தனது சமூக வலைத்தளத்தில் எழுதிய பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.