close
Choose your channels

2 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் பிரபல இயக்குனர்களின் படங்கள்.. இந்த முறை வெற்றி யாருக்கு?

Wednesday, July 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர்களின் படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசான நிலையில் அதே இயக்குனர்களின் அடுத்த படங்கள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ’கோப்ரா’ என்ற திரைப்படமும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது.

அதேபோல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான்’ மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ’டிமாண்டி காலனி 2’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.

2022 ஆம் ஆண்டு வெளியான இரு இயக்குனர்களின் படங்களும் சுமாரான வெற்றியை அடைந்த நிலையில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் இரு இயக்குனர்களின் படங்களில் யாருடைய படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் அதே ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ’ரகு தாத்தா’ ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment