20 ஆண்டுகளுக்கு பின் ரிலீசாகும் ரஜினியின் படம்.. விரைவில் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஒன்று கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’பாபா’. இந்த படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படம் ரிலீஸானபோது ஒரு பிரபல அரசியல் கட்சி இந்த படத்திற்கு எதிராக பிரச்சனை செய்தது என்பதும் அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது ’பாபா’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு மீண்டும் படத்தொகுப்பு பணி செய்யப்பட்டுள்ளதாகவும் கலர் கிரேடிங், ரீமிக்ஸ் உள்பட பல டிஜிட்டல் அம்சங்கள் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது வெளியாகும் ’பாபா’ படத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு புது அனுபவம் ஏற்படும் என்றும் கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே கமல்ஹாசனின் ’ஆளவந்தான்’ திரைப்படம் மறுபடத்தொகுப்பு செய்யப்பட்டு விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் ரஜினியின் ’பாபா’ திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன்: யாருக்கு குறி?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில முறை ஓபன் நாமினேஷன் நடத்தப்படும் என்பதும் அப்போது நாமினேஷன் செய்பவர் நேரடியாகவே இரண்டு போட்டியாளர்களை அவர்கள் முன்னாடியே

கார், டிவி, பிரிட்ஜ் எதுவும் வாங்காதீங்க…. அமேசான் நிறுவனரே கூறிய புதிய அறிவுரை!

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் கார், டிவி, பிரிட்ஜ், டிவி என எந்த அத்யாவசியப் பொருள்

பெண் குழந்தையை தத்தெடுத்த நடிகை ரோஜா.. இன்று அவர் என்ன செய்கிறார் தெரியுமா?

 நடிகை ரோஜா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுமியை தத்தெடுத்த நிலையில் இன்று அந்த சிறுமி மருத்துவம் படிப்பதற்காக கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.

ராபர்ட் உடன் காதலை முறித்து கொண்டாரா நிஜ காதலி?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர், பிக்பாஸ் வீட்டிற்குள் ரக்சிதாவை சுற்றி சுற்றி வந்து ஒருதலையாக காதலித்து வரும் நிலையில் அவரது நிஜ காதலி அவருடனான

புற்று நோயில் இருந்து மீண்ட பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

இரண்டு முறை புற்று நோயிலிருந்து மீண்ட பிரபல நடிகை ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.