த்ரிஷாவை அடுத்து 'சூர்யா 45' படத்தில் இணைந்த 2 நட்சத்திரங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், இந்த படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் மேலும் இரண்டு நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
சூர்யாவின் 45ஆவது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சூர்யா மற்றும் த்ரிஷா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதனிடையே, இந்த படத்தில் மேலும் மலையாள நடிகர் இந்திரன்ஸ், நடிகை ஸ்வாசிகாவும் இணைந்துள்ளனர் என்று ஆர்.ஜே. பாலாஜி அறிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரபல நடிகரான இந்திரன்ஸ், 1985ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவரது முக்கிய படங்கள் "ஆடும் கூத்து" மற்றும் "நண்பன்" ஆகியவை.
இந்நிலையில், இந்த படத்தில் இணைந்துள்ள இன்னொரு நட்சத்திரம் ஸ்வாசிகா சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில் "யசோதை" கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது அவர் சூர்யாவின் 45வது படத்திலும் இணைந்துள்ளார், இது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்த படத்தில் இன்னும் யாரெல்லாம் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Welcoming the legend Indrans and talented Swaswika to #Suriya45 🔥 pic.twitter.com/OubJboMQJr
— RJ Balaji (@RJ_Balaji) December 15, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments