விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் எப்போது? நாளை தெரிய வாய்ப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கடந்த 5 மாதங்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதே நேரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி விட்டது என்றே கூறலாம்.
பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்ய நாடு முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களிடம் மத்திய அரசு நாளை ஆலோசனை செய்ய உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்க சங்கத்தின் சார்பில் ஜூம் செயலி மூலம் ஒரு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும், தென்னிந்தியத் திரையரங்கு உரிமையாளர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளை திறக்க கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளதாகவும் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மாநில அரசும் அதை ஏற்றுக்கொள்ளும் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
எனவே திரையரங்குகள் திறப்பது குறித்து தகவல் நாளைய மத்திய அரசின் கூட்டத்திற்கு பின் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை திரையரங்குகள் திறப்பது குறித்த முடிவு தெரிந்து விட்டால் அதன்பின் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ உட்பட பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com