'வாரிசு' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்.. அதிகாரபூர்வ அறிவிப்பால் விஜய்-அஜித் ரசிகர்கள் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’துணிவு’ திரைப் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை நேற்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்த நிலையில் விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியானாலும் சரியான ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என நேற்று போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது ‘வாரிசு’ படமும் ஜனவரி 11ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வாரிசு’ படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ‘வாரிசு’ ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாள்களில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இரு படங்களும் ஒரே நாளில் அதாவது ஜனவரி 11ல் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் நடித்த ’வீரம்’ மற்றும் விஜய் நடித்த ’ஜில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இரு நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித், விஜய் படங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அஜித், விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#Varisu is releasing worldwide in theatres on Jan 11th 🔥
— Sri Venkateswara Creations (@SVC_official) January 4, 2023
Indha Pongal pakka celebration nanba 🤩#VarisuFromJan11 #Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana #Varisu #VarisuPongal pic.twitter.com/tJeqVqNYdB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments