'வாரிசு' படத்தின் ரிலீஸ் உரிமையையும் வாங்கிய ரெட் ஜெயண்ட்: கோலிவுட்டில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் பொங்கல் தினத்தில் தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் தல அஜித் நடித்த 'துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.
இதனால் ’துணிவு’ படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விஜய்யின் ’வாரிசு’ படத்தின் முக்கிய சில ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, வடஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் ’வாரிசு’ ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ’வாரிசு’ படத்திற்கு தமிழகத்தில் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
We are making this a memorable #VarisuPongal for you!
— Seven Screen Studio (@7screenstudio) December 17, 2022
Happy to announce our TN Distributors of #Thalapathy @actorvijay Sir's #Varisu ??
@SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @RedGiantMovies_ @Jagadishbliss pic.twitter.com/uXsvRZs1jP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments