'துணிவு' படத்தை அடுத்து ஷாலினி அஜித் மகளுடன் பார்த்த படம்.. வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,February 11 2023]

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் அந்த படத்தை தனது மகள் அனோஷ்கா மற்றும் தங்கை ஷாமிலியுடன் ஷாலினி அஜித் பார்த்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’துணிவு’ படத்தை அடுத்து நேற்று ரிலீஸ் ஆன கவினின் ‘டாடா’ படத்தை ஷாலினி அஜித் முன்னணி திரையரங்கில் பார்த்துள்ளார். அவருடன் அவருடைய தங்கை ஷாமிலி மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வெளியான கவினின் ’டாடா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த படம் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதும் கவினுக்கு ஜோடியாக ’பீஸ்ட்’ படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகிய இருவருமே மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் என்பதும் வித்தியாசமான கதைய அம்சம் கொண்ட நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் கலந்த படம் என்றும் படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் காட்சியை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் சென்னையில் உள்ள முன்னணி திரையரங்கில் பார்த்தார். அவருடன் அவருடைய மகள் மற்றும் சகோதரியும் வந்திருந்த நிலையில் அவர்களை திரையரங்க நிர்வாகிகள் வரவேற்றனர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

விஜய்யின் 'லியோ': லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 

'லியோ' பாணியில் 'ஏகே62': சுபாஷ்கரனிடம் ஒப்புதல் வாங்கிவிட்டாரா மகிழ்திருமேனி?

விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் போது அட்டகாசமான புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்பட்ட நிலையில் அதேபோல் 'ஏகே 62' படத்தின் டைட்டிலையும் புரோமோ வீடியோ உடன்

மூளைமாற்று அறுவை சிகிச்சை கதையா? 'பிச்சைக்காரன் 2' படத்தின் டிரைலர்..!

 விஜய் ஆண்டனி நடித்த இயக்கியுள்ள 'பிச்சைக்காரன் 2' படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் இன்று ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த வீடியோ ரிலீஸ் ஆகியுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பின் ஆக்ரோஷமான ஒரு அம்மன் பாட்டு: பிருந்தாவின் 'தக்ஸ்' பாடல் ரிலீஸ்..!

நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவான 'ஹேய் சினாமிகா' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்து உள்ள இரண்டாவது திரைப்படம் 'தக்ஸ்'.

விஜய்யின் 'லியோ' கதை குறித்து முதல்முறையாக மனம் திறந்த அர்ஜூன்..!

தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தின் கதை குறித்து இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஆக்சன் கிங் அர்ஜுன் முதல் முறையாக மனம் திறந்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.