நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகும் அனுஷ்காவின் படம்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை ஆக இருந்த அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘சைலன்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு பிறகு தற்போது மூன்று ஆண்டுகளுக்கு அவர் நடித்து வரும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷெட்டி, தமிழ் தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக அஜித், விஜய், சூர்யாவுடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா ஷெட்டி நடித்த ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படம் உருவாகிய நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நாளை மதியம் 1.35 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பின் அனுஷ்காவை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் கலை வல்லுநராக அனுஷ்கா நடித்து வரும் இந்த படம் ராதான் இசையில் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
It's time to "stand-up" and take notice 📢
— Anushka Shetty (@MsAnushkaShetty) July 2, 2023
The much-awaited release date of #MissShettyMrPolishetty will be served tomorrow🥳@NaveenPolishety @filmymahesh @UV_Creations @radhanmusic #NiravShah #RajeevanNambiar #KotagiriVenkateswararao @JSKapoor1234 @actornasser… pic.twitter.com/BZ4jbpoSnk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments