3 நாள் கழிச்சு வீட்டுக்கு போறேன்.. சென்னை வெள்ளம் குறித்து 'பாக்கியலட்சுமி' கோபி
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூன்று நாட்களாக அக்கா வீட்டில் தங்கி விட்டு தற்போது தான் தனது வீட்டிற்கு செல்ல போவதாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த நடிகர் கோபி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் கோபிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக தன்னுடைய வீட்டில் மின்சாரம் இல்லை என்றும் அதனால் தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்றுள்ளதாக வீடியோ ஒன்றில் கோபி கூறியுள்ளார்.
தற்போது தன்னுடைய வீட்டில் மின்சாரம் வந்துவிட்டதாகவும் மூன்று நாட்களாக அக்கா வீட்டில் இருந்த தான் தற்போது தன்னுடைய வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். என்னதான் அக்கா வீடு, சொந்தக்காரங்க வீடு, நண்பர்கள் வீடு என்றாலும் நம்ம வீடு மாதிரி வருமா’ என்று கூறியுள்ளார்.
மேலும் தனக்காக தன்னுடைய வீட்டில் நாய் பூனை எல்லாம் காத்து கிடக்கும் என்றும் குறிப்பாக கொசு என்னை கடிப்பதற்காக காத்திருக்கும் என்றும் நகைச்சுவையாக பேசி உள்ளார். இது குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com