'தளபதி 68' படத்தை அடுத்து இன்னொரு பிரபல நடிகருடன் பிரியங்கா மோகன்..
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன், அந்த படத்தின் வெற்றி காரணமாக பல படங்களில் நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம். குறிப்பாக தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ படத்தில் பிரியங்கா மோகன் தான் நாயகி என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும் ஜெயம் ரவி உடன் ’பிரதர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நானி நடிக்க உள்ள 31-வது திரைப்படத்தின் நாயகி பிரியங்கா மோகன் தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் பூஜை 24 ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தெலுங்கு பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ’ஓஜி’ என்ற படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல தெலுங்கு நடிகர் நானி உடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The elegant and talented @priyankaamohan is all set to sizzle as the female lead in #Nani31 ❤️🔥
— Yuvraaj (@proyuvraaj) October 21, 2023
UNCHAINED on Oct 23rd.
Muhurtham is on Oct 24th.
Natural🌟 @NameIsNani #VivekAthreya @DVVMovies pic.twitter.com/glvHwzoqhI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments