மீண்டும் திமுக ஆட்சி: வடிவேலுவுக்கு விடிவுகாலம் பிறக்குமா?

  • IndiaGlitz, [Saturday,May 08 2021]

கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக வடிவேலு தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது அதிமுக மற்றும் தேமுதிகவை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்து அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதை அடுத்து வடிவேலுவை அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தவிர்த்து வந்தனர்

ஆளுங்கட்சியின் கோபத்திற்கு ஆளாகலாம் என்பதால் திரையுலகில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த வடிவேலு திரையுலகினர்களால் தவிர்க்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வடிவேலுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதும், ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் அந்த படங்கள் சரியாக போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சி வந்து உள்ளது. இதனை அடுத்து வடிவேலுக்கு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 10 ஆண்டுகளாக நடிக்கவில்லை என்றாலும் அவரது பழைய நகைச்சுவை காமெடிகளை இன்னும் ரசிகர்கள் ரசித்து வரும் நிலையில் வடிவேலு மீண்டும் புத்துணர்ச்சி பெற்று தனது பழைய இடத்தை மீண்டும் பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.,