10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்தை இயக்குகிறாரா இந்த இயக்குனர்.. வைரல் டுவிட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான விஜய் படத்தை இயக்கிய இயக்குனர், 10 வருடங்களுக்குப் பின் மீண்டும் அவருடைய படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய், மோகன்லால் நடிப்பில் நேசன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ஜில்லா’. கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியானது என்பதும் இந்த படம் அஜித் நடித்த ’வீரம்’ படத்துடன் இணைந்து வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜில்லா’ திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் இயக்குனர் நேசன் அதன் பிறகு வாய்ப்புகள் எதையும் பெறவில்லை. இந்த நிலையில் இயக்குனர் பத்ரி வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தனது நண்பர் நேசன் விஜய்க்காக ஒரு அருமையான ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்திருப்பதாகவும் இந்த ஸ்கிரிப்ட்டை கேட்டால் நிச்சயம் விஜய் இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை நேசன் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Muzhgatha ship aa friendship than!!#Jillanesan. Heard is new script from for thalapathy @actorvijay
— Badri Venkatesh (@dirbadri) February 7, 2023
Phenomenal
Hope thalapathy accepts and the movie materializes!!
Attakasam if it happens for thalapathy fans!! pic.twitter.com/SgGppSa09w
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com