10 வருடங்களுக்கு பின் தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகை.. 'வாரிசு' நடிகர் தான் ஹீரோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘வாரிசு’ படத்தில் நடித்த நடிகர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் மலையாள நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாகவும், இவர் 10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிய இவர், அதன் பின்னர் பல படங்களில் போலீஸ் கேரக்டரில் நடித்த நிலையில் ‘வாரிசு’ படத்தில் சற்று வித்தியாசமான கேரக்டரில் நடித்தார்.
இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராமன் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஜெயதேவ் என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும் இவர் ஏற்கனவே ’பட்டினப்பாக்கம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரில் கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக பாவனா நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாகவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இவர் மீண்டும் தமிழில் நடிக்க வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை பாவனா மிஷ்கின் இயக்கிய ’சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் ’வெயில்’ ’ராமேஸ்வரம்’ ’ஜெயம் கொண்டான்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2010ஆம் ஆண்டு அஜித் நடித்த ‘அசல்’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்த பாவனா தற்போது மீண்டும் தமிழுக்கு ரீஎண்ட்ரி ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments