தெலுங்கை அடுத்து மலையாள திரையுலகில் காலடி வைக்கும் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Friday,November 30 2018]

தமிழ் சினிமாவில் யாருடைய உதவியும் இன்றி உழைப்பால் முன்னேறிய ஒருசில நடிகர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர். தன்னுடைய கடின உழைப்பால் இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது மட்டுமின்றி 25வது படம் என்ற மைல்கல்லையும் தொட்டுள்ளார். ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக தருவது மட்டுமின்றி, எடுத்து கொண்ட கேரக்டருக்காக அவரது உழைப்பு அபாரமானது.

இந்த நிலையில் தமிழின் முன்னணி இடத்தை பிடித்துவிட்ட விஜய்சேதுபதி, சிரஞ்சீவி நடித்து வரும் தெலுங்கு படமான 'சைரா நரசிம்மரெட்டி' படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வருகிறார். தெலுங்கை அடுத்து தற்போது மலையாள திரைப்படம் ஒன்றிலும் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபல மலையாள நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கும் ஒரு மலையாள படத்தில் விஜய் சேதுபதிக்கும் கதாநாயகனுக்கு இணையான வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை சாஜன் என்பவர் இயக்கவுள்ளார்.