'தேஜாவு' படத்தை அடுத்து அருள்நிதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுவா?

  • IndiaGlitz, [Friday,July 15 2022]

அருள்நிதி நடித்த ’டி பிளாக்’ என்ற திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் ஜூலை 22ஆம் தேதி அவர் நடித்த ’தேஜாவு’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அருள்நிதி நடித்த ‘டைரி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அருள்நிதி நடித்த ’டைரி’ படத்தின் டீசர் கடந்த ஆண்டு இதே நாளில்தான் வெளியானது என்பதும் இந்தப் டீசர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டைரி’ திரைப்படத்தை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரான் எதான் யோஹான் இசையில் அரவிந்த்சிங் ஒளிப்பதிவில் ராஜா சேதுபதி படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் அருள்நிதியின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.