தமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த கொரோனா விடுமுறையில் தமிழ் தெலுங்கு திரைப்படங்களின் பாடல்களுக்கு நடனமாடி அதுகுறித்த வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்தோம்.

கமலஹாசன் நடித்த ’தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி, ’ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ஒட்டகத்தை கட்டிக்கோ, பிரபுதேவா நடித்த ’காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’முக்காலா முக்காபுலா’ மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான புட்டபொம்மா ஆகிய பாடல்களுக்கு நடனமாடி சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கை அடுத்து ஹிந்திக்கு காலடி வைத்துள்ளார் டேவிட் வார்னர். பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அக்சயகுமாரின் ’ஹவுஸ்புல் 4’ என்ற படத்தில் இடம்பெற்ற ’பாலா பாலா’ என்ற பாடலுக்கு டேவிட் வார்னர் சூப்பராக அக்சயகுமார் போலவே நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும், இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.