அண்டை மாநிலத்திலும் 7 மணி காட்சி ரத்தா? விஜய் மக்கள் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தமிழகத்தில் 4 மணி மற்றும் 7 மணி காட்சிக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் 7:00 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில திரையரங்குகளில் 7 மணி காட்சி திரையிட விரும்பவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் விஜய் ரசிகர்கள் சில திரையரங்குகளில் 7 மணி காட்சி திரையிட வேண்டும் என நெருக்கடி கொடுத்ததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில் நெருக்கடிகளை தவிர்க்க புதுச்சேரியில் ‘லியோ’ திரைப்படத்தை 7 மணி காட்சி திரையிடுவதில்லை என புதுவை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நெருக்கடிகளை தவிர்க்க புதுச்சேரியிலும் 9 மணிக்கு மேல் ‘லியோ’ படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ள நிலையில், 7 மணிக்கு காட்சியை திரையிட வலியுறுத்தி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments