தமிழக முதல்வரை அடுத்து 'ஜெயிலர்' படம் பார்த்த இன்னொரு மாநில முதல்வர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்த்தார் என்று செய்திகள் வெளியானது. மேலும் அவர் இயக்குனர் நெல்சனை அழைத்து தனது பாராட்டுகளையும் தெரிவித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் தமிழக முதல்வரை அடுத்து அண்டை மாநில முதல்வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தை நேற்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது குடும்பத்துடன் பார்த்துள்ளதாக தெரிகிறது. கேரள முதல்வர் படம் பார்க்க திரையரங்குக்கு வந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே பினராயி விஜயன் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டியில் தனது கணவர் ஒரு ரஜினி ரசிகர் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக, கேரள முதல்வர்களை அடுத்து கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுவை முதல்வர்களும் ‘ஜெயிலர்’ படத்தை பார்ப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#JailerBlockbuster#JailerBORampage#KeralaCM
— Satheesh (@Satheesh_2017) August 12, 2023
தமிழக முதல்வரை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனும் தன் குடும்பத்தினருடன் JAILER திரைப்படத்தை கண்டுகளித்தார்🔥
"என் கணவர் ரஜினி ரசிகர்"
-பினராயி விஜயன் மனைவி😍
இன்னும் 2 நாள்ல கர்நாடகா முதல்வரும் தியேட்டருக்கு படையெடுப்பாரு😁 pic.twitter.com/fg0LsnNz37
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com