தமிழ், தெலுங்கை அடுத்து பிரபல மலையாள நடிகர் படத்தில் த்ரிஷா ..!

  • IndiaGlitz, [Thursday,July 06 2023]

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகி ஆக நடித்து வரும் த்ரிஷா ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றிக்கு பிறகு மீண்டும் பிரபல நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

தளபதி விஜய்யுடன் த்ரிஷா நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்திலும் அவர்தான் நாயகி என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் தென்னிந்திய அளவில் பிரபல நடிகர்களுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.