102 டிகிரி காய்ச்சல்: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிக்பாஸ் பிரபலத்தின் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல திரையுலக பிரபலங்களும் தடுப்பூசி போட்டு அதன் புகைப்படத்தை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து ரசிகர்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஷெரின் தடுப்பூசி போட்டுக்கொண்டார், அவர் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்த புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நான் தனக்கு சில உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில், ‘தனது உடல்நிலை சரியில்லை என்றும் 102 அளவுக்கு காய்ச்சல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாங்க முடியாத உடல்வலி, தலைவலி மற்றும் சோர்வாக இருப்பதாகவும் தெரிவித்த அவர் இந்த அறிகுறிகள் எல்லாம் தடுப்பூசி வேலை செய்கிறது என்பதையே காட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஷெரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments